தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவருடைய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகும் நிலையில், நடிகர் மகேஷ்பாபுவின் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதன்பிறகு நடிகர் மகேஷ்பாபுவுக்கு திருமணம் ஆகி ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். இவருடைய மகள் சித்தாராவுக்கு தற்போது 10 வயது ஆகிறது. இந்நிலையில் சித்தாரா சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதோடு அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களையும் வெளியிடுவார்.
இவருக்கு இன்ஸ்டாவில் மட்டும் 1 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்கள் இருக்கிறார்கள். அதோடு சித்தாரா வெளியிடும் ஒரு போட்டோவுக்கு லட்சக்கணக்கான லக்ஸ்களும் குவியும். இந்நிலையில் சித்தாரா தற்போது டிரெண்டிங் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வருங்கால ஹீரோயின் போல் ஜொலிக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் சித்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அனைத்தும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.