மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 ஐ எட்டியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இவ்வாறு பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் கேரளாவின் காசாராகாட் மாவட்டத்தில் உள்ள குடுகோலி பெட்ரோல் பங்கில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தினமும் இலவசமாக 3 லிட்டர் பெட்ரோல் டீசலை அதன் உரிமையாளர் வழங்குகிறார். பிரபலம் அடையும் நோக்கில் இதனை செய்யவில்ல. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவும் நோக்கத்துடன் மட்டுமே செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.