கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வரும் ரிஷப் செட்டி தற்போது காந்தாரா என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் கன்னட மொழியில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படம் 200 கோடி ரூபாயை கடந்து வசூல் சாதனை புரிந்து வருகிறது. இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கங்கனா ரணாவத் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெங்களூரில் உள்ள தன்னார்வலுடன் சேர்ந்து காந்தாரா திரைப்படத்தை தியேட்டரில் அமர்ந்து பார்த்துள்ளார். இந்த தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன் பிறகு நிர்மலா சீதாராமன் காந்தாரா திரைப்படம் மிகவும் சிறப்பாக இருக்கிறது என்றும், நம்முடைய செழுமையான பாரம்பரிய பழக்கவழக்கங்களை படம் காட்டுகிறது என்றும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவுக்கு நடிகர் ரிஷப் செட்டி நன்றி தெரிவித்து ட்வீட் பதிவு செய்துள்ளார்.