ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் டாம் குரூஸ் (60). இவர் ஆபத்தான சண்டைக் காட்சிகளை கூட டூப் இல்லாமல் தானே செய்வார். இவர் நடிப்பில் வெளியான டாப் கன் மற்றும் மிஷன் இம்பாசிபிள் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. இவர் தற்போது மிஷன் இம்பாசிபில் 2-ம் பாகத்தில் நடித்துவரும் நிலையில் அந்த படத்திற்காக ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
அந்த வகையில் டாம் குரூஸ் தன்னுடைய பைக்கில் மலை உச்சியில் இருந்து கீழே குதிக்கும் ஆபத்தான ஸ்டண்ட் காட்சியை செய்து அந்த வீடியோவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில், நடிகர் சூர்யா டாம் குரூஸ் பகிர்ந்த வீடியோவை ரீ ட்வீட் செய்துள்ளார். அதோடு வாவ்!. இதை நம்ப முடியவில்லை என்றும் பதிவு செய்துள்ளார். மேலும் டாம் குரூஸ் பகிர்ந்த வீடியோவானது தற்போது வலைதளத்தில் படு வைரலாகி வருகிறது.
Unbelievable!!! Woooowww!!!! https://t.co/8UANLusavk
— Suriya Sivakumar (@Suriya_offl) December 19, 2022