விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கி தற்போது திரைப்படங்களில் நடித்து வருபவர் ராமர். இவருடைய காமெடியை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. அந்த அளவுக்கு நடிகர் ராமரின் காமெடிக்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் நடிகர் ராமர் தற்போது சொந்தமாக ஒரு வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தியுள்ளார்.
இந்த கிரகப்பிரவேசத்தில் நடிகர் ரோபோ சங்கர் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் நடிகர் ராமருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.