Categories
சினிமா தமிழ் சினிமா

WOW!….‌ இது அல்லவா வாழ்க்கை… பிரபல நடிகர் பகிர்ந்த ஜாலியான வீடியோ….. இணையத்தில் செம டிரெண்டிங்….!!!!!

மலையாள சினிமாவில் பிரபல நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால். தனது தந்தையை போலவே இவரும் நடிகராக மாறி பல படங்களை ஹீரோவாக நடித்து வருகிறார். இவரின் ஆசை டைரக்ஷன் பக்கம் இருந்ததால் தொடக்கத்தில் இவர் ஜீத்து ஜோசப்பிடம் உதவியாளராக சில திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

ஆனால் இவர் அடுத்தடுத்த படங்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தாமல் தான் விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான ஹிருதயம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இருந்தபோதிலும் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இல்லாமல் வெளிநாடுகளில் ஜாலியாக சுற்றி வருகிறார். மலை உச்சியில் இருந்து நீருக்குள் தாவுகிறார் பாறைகளில் டென்டடித்து தங்கியுள்ளார். மேலும் செங்குத்தான பாறை மீது ரிஸ்க் எடுத்து ஏறுகிறார். இது போன்ற வீடியோ பதிவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் மனுஷன் வாழ்க்கையை என்னமா வாழ்றான்யா என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |