“காந்தாரா” திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது.
கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவந்து பெரும் வரவேற்பையும், வசூலையும் குவித்து வரும் படம் “காந்தாரா”. இந்த திரைப்படம் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவானதாகும். இந்த “காந்தாரா” திரைப்படம் கன்னடத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையையும் பெற்று தந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார் .
அதன் அடிப்படையில் நேற்று (அக்டோபர் 15) தமிழ் திரையரங்குகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு “காந்தாரா” திரைப்படம் வெளியானது. பின்னர் இந்த திரைப்படம் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தை போன்று மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், “காந்தாரா” திரைப்படத்தைப் பார்த்த கார்த்தி, இயக்குனர் ரிஷப் ஷெட்டியை நேரில் சந்தித்துப் பாராட்டினார். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
.@Karthi_Offl expresses his love towards @shetty_rishab for #Kantara #காந்தாரா #KantaraFromToday @VKiragandur @hombalefilms @prabhu_sr @gowda_sapthami @AJANEESHB #ArvindKashyap @actorkishore #KantaraTamil pic.twitter.com/EerZzT2Tsb
— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 15, 2022