சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவர் மகாலட்சுமி. இவர் நிறைய சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ரவீந்தர் தயாரிப்பில் விடியும் வரை காத்திரு என்ற படத்தில் மூலம் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. சமீபத்தில் லிப்ரா ப்ரோடுக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தரை இவர் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் அவ்வப்போது தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகை மகாலட்சுமி தனது சமூக வலைதள பக்கத்தில் அல்வாவை ப்ரொமோட் செய்துள்ளார். அல்வாவை சுவைத்தபடி இருக்கும் இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.