Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. “வாரிசு ஆடியோ லாஞ்சில் தளபதியின் மாஸ் என்ட்ரி”…. ரசிகர்களின் உற்சாக வரவேற்பால் அதிர்ந்த அரங்கம்….!!!!

பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஹைதராபாத் போன்ற பகுதிகளில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில்,  ஃபர்ஸ்ட் சிங்கிள்,  செகன்ட் சிங்கிள் என பாடல்கள் வெளியாகின. இந்த நிலையில் தான் இந்த திரைப்படத்தின் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

actor_vijay

இந்நிலையில், இந்த விழாவிற்கு நடிகர் விஜய் வேற லெவல் என்ட்ரி கொடுத்து நேரு விளையாட்டு அரங்கத்திற்கு உள்ளே நுழைந்தார். மேலும், ரசிகர்களை பார்த்து அவர் கையை அசைத்தபடி தனது இருக்கைக்கு வந்தார். இவரின் வருகைக்கு ரசிகர்கள் பலத்த சத்தத்துடன் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

 

Categories

Tech |