கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையின் கீழ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடது ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கேரள மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாறி மாறி ஆட்சியை கைப்பற்றி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வெற்றி பெற்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆட்சி அமைந்தது. இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் தற்போது ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
அதாவது கேரளாவில் அதிக நாட்கள் முதல்வராக இருந்தவர் என்ற பெருமை பினராயி விஜயனுக்கு கிடைத்துள்ளது. இதுவரை அதிக நாட்கள் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையை அச்சுத மேனன் பெற்றிருந்தார். இவர் 2364 நாட்கள் பதவியில் இருந்துள்ளார். இந்த சாதனையை தற்போது முதல்வர் பினராயி விஜயன் முறியடித்து 2365 நாட்கள் பதவியில் அமர்ந்துள்ளார். மேலும் இதன் காரணமாக அதிக நாட்கள் முதல்வர் பதவியில் அமர்ந்தவர் என்று பெருமையைப் பினராயி விஜயன் பெற்றுள்ளார்.