மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் வாய்ஸ் ஸ்டேட்டஸ் வைக்கும் புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது. அதன் பிறகு புது வசதிகள் செயலின் ஸ்டேபிள் வெர்ஷினில் வழங்கப்படுவதற்கு முன்பாகவே பீட்டா வெர்ஷனில் சோதனை அடிப்படையில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஐஓஎஸ் பீட்டா வெர்ஷனில் புது அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை WABetaInfo வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட புது அம்சம் எப்படி இருக்கும் என்பது தொடர்பான புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கமாக ஸ்டேட்டஸ் வைக்கும் போது 30 வினாடிகள் ஒரு வீடியோ இருப்பது போன்று, வாய்ஸ் ஸ்டேட்டசும் 30 வினாடிகள் வரை இருக்கும். அதோடு ஒரு ஸ்டேட்டஸ் 24 மணி நேரம் இருப்பது போன்று வாய்ஸ் ஸ்டேட்டசும் 24 மணி நேரம் இருக்கும். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.21.5 வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அம்சம் ஸ்டேபிள் வெர்ஷனில் எப்போது வழங்கப்படும் என்பதுதான் பலரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.