சிறிதளவு கூட எண்ணெய் சேர்க்கப்படாத உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஊசியை செய்வது எப்படி என்பது குறித்து இங்கு செய்தித் தொகுப்பில் காண்போம்
தேவையான பொருள்கள்:
கடலை பருப்பு -முக்கால் கப்,
துவரம் பருப்பு – கால் கப்,
பச்சை மிளகாய் – 3,
பெருங்காய தூள் – அரை டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு – ஒரு டேபிள் ஸ்பூன் ,
ஏதாவது ஒருவகை காய்( பொடியாக நறுக்கியது)- ஒரு கப் ,
கடுகு -அரை டீஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
முதலில் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் கலந்து ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஊறவைக்கவேண்டும். ஊறவைத்த பின் தண்ணீரை வடிகட்டி விட்டு மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த மாவை உருண்டைகளாகப் பிடித்து இட்லி கொப்பரையில் 10-15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
வேகவைத்த உருண்டையை கைகளால் தூள் தூளாக்கி மீண்டும் மிக்ஸியில் அரைக்க வேண்டும். பின்வரும் பொடி போன்ற கலவையை வெட்டிய காய்கறியுடன் சேர்த்து குக்கரில் வேக வைக்கவேண்டும். ஒரு விசில் வந்தவுடன் இறக்கி அதனை ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து வெறும் கடாயில் கடுகு,
கருவேப்பிலை போட்டு வறுத்து பின் தட்டில் பரிமாறினால் அருமையான உசிலி சாப்பாடு தயார். இதில் எண்ணெய் சிறிதளவுகூட சேர்க்காததால் கொலஸ்ட்ரால் பிரச்சினை என்பது இல்லை. பொதுவாக வேக வைக்கப்படும் அனைத்து உணவுகளும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.