Categories
சினிமா தமிழ் சினிமா

WOW!… செம க்யூட்…. மகளை அறிமுகப்படுத்திய “ஆர்யா-சாயிஷா” ஜோடி…. வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்….!!!!!

தமிழ் சினிமாவில் ‌ நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகர் ஆர்யா மற்றும் சாய்ஷா ஜோடி. கடந்த 2019-ம் ஆண்டு ஆர்யா மற்றும் சாயிஷா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு கடந்த வருடம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு Ariana என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை சாய்ஷா தன்னுடைய கணவர் ஆர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வாழ்த்து பதிவுடன் தங்களுடைய மகளின் புகைப்படத்தையும் சாய்ஷா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்கள் குழந்தை மிகவும் க்யூட்டாக இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Categories

Tech |