மறைந்த விவேக்கின் ஸ்டைலிஸ் லுக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். சமீபத்தில் நிகழ்ந்த இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து ரசிகர்களும், திரைப்பிரபலங்கள் அவரது மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். விவேக் நம்மை விட்டு பிரிந்தாலும் அவர் நடித்துள்ள 3 படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
அதன்படி விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர், கமலஹாசனின் இந்தியன்2 மற்றும் லெஜெண்ட் சரவணா ஹீரோவாக நடித்துள்ள படத்திலும் விவேக் நடித்துள்ளார். இந்நிலையில் விவேக் ஸ்டைலிஷான லுக்கில் White and White உடை அணிந்து எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் ரசிகர்கள் பலரும் இவ்வளவு ஸ்டைலிஷான மனிதரை மிஸ் செய்து விட்டோமே என்று வருத்தப்பட்டு வருகின்றனர்.