தமிழ் திரையுலகில் ரசிகர்களால் இன்றளவும் மறக்க முடியாத நடிகர்களில் ஒருவர் சிவாஜி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்தது. இயக்குனர் பி. மாதவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 1972 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் ”பட்டிக்காடா பட்டணமா”.
இந்த படத்தில் ஜெயலலிதா, மனோரமா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் மதுரை சோழவந்தானில் படமாக்கப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தின் 50 ஆவது ஆண்டு விழாவை மதுரையில் சிவாஜி ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.
ராஜா முத்தையா மன்றத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிவாஜியின் மகன் ராம்குமார், குற்றவியல் நீதித்துறை நீதிபதி சண்முகையா நடிகர் ஒய் ஜி மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்தப் படத்தை ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து பார்த்து ரசித்தனர்.