மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா வுக்காக தனுஷ், ஐஸ்வர்யா மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி கடந்த ஜனவரி 14-ஆம் தேதி பிரிய போவதாக இணையத்தில் பதிவிட்டுள்ளார்கள். இவர்களது இந்த முடிவால் இருவீட்டார்களும், நண்பர்களும் ஷாக்காகியுள்ளார்கள். அதன் பின்பு இருவரையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் குடும்பத்தார்களும் நண்பர்களும் களமிறங்கியுள்ளார்கள். அதுமட்டுமின்றி நடிகர் ரஜினி ஐஸ்வர்யாவிடம் மிகவும் கடுமையாக கோபப்பட்டுள்ளார். இவ்வாறு இருக்க தனது தந்தைக்காக மீண்டும் தனுஷுடன் சேருவதற்கு ஐஸ்வர்யா முடிவு எடுத்துள்ளார்.
ஆனால் தனுஷ் ஐஸ்வர்யாவுடன் தான் மீண்டும் சேர்ந்து வாழ மாட்டேன் என்று அடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இந்த பிரச்சனை தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தங்களது மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவுக்காக மீண்டும் சேர்ந்து வாழ தனுஷ் ஐஸ்வர்யா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த முடிவு நிரந்தரமானதாக அல்ல என்றும், தற்போது மட்டுமே அவர்கள் சேர்ந்து வாழப் போகிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.