பஞ்சாப் கிங்ஸ் அணி மயங்க் அகர்வாலை கேப்டனாக நியமித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐபிஎல்லின் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி மயங்க் அகர்வால், அர்ஷ்தீப் சிங் ஆகியோரை தக்கவைத்துள்ளது. ஆனால் கேப்டன் கேஎல் ராகுல் உட்பட அனைவரையும் விடுத்துள்ளது. இவ்வாறு இருக்க 72 கோடி உடன் ஏலத்திற்கு சென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பல முன்னணி வீரர்களை தட்டி தூக்கியுள்ளது.
அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணி ஷிகர் தவனை 8.25 கோடிக்கும், ஜானியை 6.75 கோடிக்கும் வாங்கியுள்ளது. அதேபோல் காகிசோ ரபாடாவை 9.25 கோடிக்கும், ஷாருக்கானை 9 கோடிக்கும், சஹாராவை 6.25 கோடிக்கு, லிவிங்ஸ்டனை 11.50 கோடிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இந்நிலையில் மயங்க் அகர்வாலை பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டனாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.