வாட்ஸ் அப்பில் பயனாளர்களுக்கு இரண்டு புதிய அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
தங்கள் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தற்போதைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவர்களின் அனைத்து சேவைகளும் செல் போன் மூலமாகவே நடக்கின்றன. அதற்கு பல்வேறு செயலிகளை அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக நண்பர்களுடன் உரையாடுவதற்கு வாட்ஸ் அப் செயலியை மிகவும் பிரபலமானது. தங்கள் பயனாளர்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் புது புது அப்டேட்களை செய்து வருகிறது.
இந்நிலையில் வாட்ஸ்அப் உரையாடல் பதிவுகளை டெலிகிராம் செயலிலும் மாற்றிக் கொள்ளும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. அதாவது வாட்ஸப் குழுவின் பெயர் அல்லது அந்த நபரின் பெயரை கிளிக் செய்து info பக்கத்திற்கு சென்று, export chat எந்தத் தேர்வை கிளிக் செய்தால் டெலிகிராமுக்கு உரையாடல் மாற்றப்படும். மேலும் வாட்ஸ்அப் வெப் அல்லது டெக்ஸ்டாப்பில் உங்களது கணக்கை இணைக்க QR Code ஸ்கேன் செய்வதற்கு முன், முகத்தையோ அல்லது விரல் கை ரேகையையும் அடையாளமாக வைத்து மொபைல் அன்லாக் செய்யும் புதிய அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.