சிவகார்த்திகேயன் செய்த சூப்பர் செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘டாக்டர்’. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. தற்போது இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டான்’.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்துள்ளார் . மேலும், இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, புகழ், காளி வெங்கட் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்த சிவகார்த்திகேயன் புரோடக்சன்ஸ் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு படம் ரிலீசாகும் போதும் சிவகார்த்திகேயன் ஏதாவது ஒரு சமூக சேவையை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், தற்போது இந்த படம் வெளியாவதைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்ட மக்களுக்காக 21 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார். இந்த ஆம்புலன்ஸ் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இவரின் இந்த செயலை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.