Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. மாணவிகளுக்கு சைக்கிள், ஸ்கூட்டர்…. பாஜக கொடுத்த அதிரடி தேர்தல் வாக்குறுதி….!!!!

குஜராத், ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் பிரசாரம் செய்து வருகின்றன. ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நாளை மறுநாள் அதாவது நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் எட்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு  முடிவுகள் வெளியிடப்படும். இந்நிலையில் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் ஆளும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பல கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை வாரி இறைத்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் தீவிர பிரசாத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பாஜக என்று இமாச்சல மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது. அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் கட்சியின் முக்கிய நோக்கம் என்றுபேசிய ஜெபி நட்டா நாங்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் எனவும் சொல்லாததையும் செய்துள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

அதே சமயம் இமாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என அறிவித்துள்ளார். அதே சமயம் மாநில இளைஞர்களுக்கு 8 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.மாநிலத்திற்கு 5 புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கிராமப்புற இணைப்பிற்கு ஐந்தாயிரம் கோடி முதலீடு என்பவையும் வாக்குறுதியில் இடம் பெற்றுள்ளது.

மேலும் பெண்களுக்கு என பிரத்தியேக வாக்குறுதிகளை அறிவித்த பாஜக அரசு வேலைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றுவோம் என உறுதி அளித்துள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு சைக்கிள் மற்றும் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ஸ்கூட்டர் ஆகியவை வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |