தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டடித்து வருகிறது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
இதனை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், கமல் நடிப்பில் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”தேவர் மகன்”.
இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கமல் கூறியது வைரலாகி வருகிறது. அதில் கமலுக்கும் நாசருக்கும் சண்டை நடைபெறும் காட்சியில் நாசரின் தலை வெட்டுப்பட்டு துண்டாக உருண்டு ஓடும். அந்த தலையில் இருந்து ரத்தம் வடிவது மேலும் மெதுவாக கண்கள் மூடும் காட்சி தனக்கு புல்லரித்துவிட்டது என கமல் கூறியுள்ளார். இவர் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#DevarMagan climax ல #Nassar தலை துண்டாக்கப்பட்ட சீன் Top Angle ல கிட்ட வர மாதிரி #KamalHaasan𓃵 சார் அந்த தலை கிட்ட க்ளோஸ் அப்ல என்னையும் கொலைகாரன் ஆக்கிட்டியேடானு அதுக்கு #Nassar தலை மட்டும் லைட்டா பேச வந்த மாதிரி scene எடுத்து இருக்காங்களாம்😲🔥Aandavarey 🔥🔥 Goosebumps pic.twitter.com/HTIipCT3yK
— 𝕄𝕒𝕕𝕦𝕣𝕒𝕚🔥 𝕊𝕒𝕟𝕕𝕚𝕪𝕒𝕣 (@Ramhaasan7) December 13, 2022