Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. சூப்பர்…. டைரக்டராகும் பிரபல முன்னணி நடிகை…. அவரே சொன்ன அசத்தலான தகவல்….!!!!

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். இதனையடுத்து இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், ‘எனக்கு காதல் கதைகளில் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் வருகிறது.

தொடர்ந்து ஏதோ ஒரு காதல் கதையில் நான் நடித்துக் கொண்டே இருக்கிறேன். நான் நடித்த காதல் படங்களில் ’18 பேஜஸ்’ என்ற திரைப்படம் மிகவும் சிறந்த படம். அதில் நந்தினிக்கு கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

மேலும், எனக்கு டைரக்டராக ஆசை இருக்கிறது. கண்டிப்பாக படத்தை டைரக்ட் செய்வேன். இப்போது நடிப்பின் மீது தான் கவனம் இருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக சில விஷயங்களை கற்றுக்கொண்ட பிறகு தான் படத்தை  டைரக்ட் செய்ய வருவேன் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories

Tech |