Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்… 2-வது முறையாக “கௌரவ டாக்டர் பட்டம்” பெற்ற பிரபல இசையமைப்பாளர்…. குவியும் வாழ்த்து….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வருபவர் டி இமான். இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, சூர்யா, அஜித் விஜய் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் இசையமைத்து தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டார். இவருக்கு விசுவாசம் திரைப் படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு இமான் தற்போது காரி மற்றும் வள்ளி மயில் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இமானுக்கு தற்போது கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது.

இந்த பட்டத்தை சமூக சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் வழங்கியுள்ளது. இது தொடர்பான தகவலை இமான் தற்போது தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததோடு, டாக்டர் பட்டத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதனால் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் இமானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இதற்கு முன்னதாக சத்தியபாமா பல்கலைக்கழகத்தினர் இமானுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

https://twitter.com/immancomposer/status/1586887800728584192?s=20&t=4pf4zobwiNzFp_OHIJ3-eg

Categories

Tech |