தமிழகத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சரியாக எழுத படிக்க தெரியவில்லை என மத்திய அரசின் வருடாந்திர கல்வி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கின் போது மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக இல்லம் தேடி கல்வி திட்டம் மற்றும் எண்ணும் எழுத்தும் திட்டங்கள் தொடங்கப்பட்டது. இந்த திட்டங்கள் தமிழகத்தில் தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் மத்திய அரசின் அறிக்கையானது பல்வேறு தரப்பினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அரசு பள்ளியைச் சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவி ஒருவர் உடலில் உள்ள உறுப்புகளை ஆங்கிலத்தில் அழகாக விவரிக்கும் ஒரு வீடியோவானது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ twitter பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவானது தற்போது பலரையும் கவர்ந்து இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சின்னஞ்சிறு குழந்தைகள் சங்க கால பாடல்களைப் பாடுதல், வண்ணங்களை அறிதல் என தங்களுடைய பல்வேறு விதமான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோவும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பள்ளிக்கல்வித்துறை வெளியிடுகிறது.
அரசுப் பள்ளி மாணவரின் 'அழகு ஆங்கிலம்' .@Anbil_Mahesh#MKStalin | #School | #Students | #GovtSchools | #TamilNadu | #TNSED | #TNEducation | #TNschools | #எண்ணும்எழுத்தும் | #EnnumEzhuthum | #Teacher | #ViralVideo | #Trending pic.twitter.com/UyP9UO9LT9
— Tamil Nadu School Education Department (@tnschoolsedu) October 7, 2022