Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. கிளாம்பாக்கத்தில் வரவிருக்கும் புதிய திட்டங்கள்….. CMRL போட்ட வேற லெவல் பிளான்….!!!!

சென்னையில் உள்ள வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள் கடந்த அ.தி.முக. ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தை கடந்த 2021-ம் ஆண்டு திறக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த பேருந்து நிலையமானது தற்போது முழுமையாக கட்டப்பட்டு வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி தினத்தை முன்னிட்டு திறக்கப்படும் என்று அறிவிப்பு  வெளியானது.

இந்த புதிய பேருந்து நிலையத்தினால் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்திலிருந்து கோயம்புத்தூர், சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மதுரை உள்ளிட்ட பல தொலைதூர மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ப்ளூ லைன் மெட்ரோ ரயில் சேவையை கிளாம்பாக்கம் வரை நீடிக்க உள்ளனர். இந்த மெட்ரோ ரயில் வசதியால் பயணிகள் வெகுவிரைவில் பேருந்து நிலையத்தை அடைந்து விடலாம்.

மேலும் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு கூடிய விரைவில் புதிய வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு வசதிகள் போன்றவைகளும வந்து விடும் என்பதால் வேலைவாய்ப்பு பெருகி கிளாம்பாக்கம் ஸ்மார்ட் சிட்டியாக மாறிவிடும் என்று கூறப்படுகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு செல்வதற்காக சென்னையின் பல பகுதிகளில் இருந்து பேருந்துகளை இயக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தாம்பரம் -செங்கல்பட்டு தேசிய நெடுஞ் சாலையை விரிவாக்கம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்திற்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு மெட்ரோ ரயில் சேவை மற்றும் புறநகர் ரயில் சேவைகளையும் இயக்குவதற்கும் திட்டமிட்டுள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தினால் செங்கல்பட்டு மாவட்டம் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள் தற்போது டிசம்பரில் நிறைவைடையும் என்று கூறப்படுவதால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயன்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Categories

Tech |