Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. “TVS XL பைக்கை எலக்ட்ரிக் வாகனமாக மாற்றிய ஆசிரியர்”…. இது வேற லெவல் சாதனை….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே அரங்குபட்டி கிராமத்தில் வைர மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிறு வயது முதலே ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால், இணையதளத்தின் மூலம் தனக்கு கிடைத்த ஒரு ஐடியாவை வைத்து எலக்ட்ரிக் வாகனத்தை தயாரித்துள்ளார். இவர் தன்னுடைய டிவிஎஸ் எக்ஸ்எல் பைக்கை எலக்ட்ரிக் பைக்காக மாற்றியுள்ளார்.

இந்த எலக்ட்ரிக் வாகனத்தை சார்ஜ் செய்தால் ஒரு யூனிட்டுக்கு 60 கிலோமீட்டர் தூரம் வரை செல்லலாம் என்றும், வாகனத்தை 50 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இது எலக்ட்ரிக் வாகனத்தின் மூலம் பெட்ரோல் செலவு மிச்சமாவதுடன், விவசாயத்திற்கும் இந்த எலக்ட்ரிக் வாகனத்தை பயன்படுத்துகிறார். இதன் காரணமாக தன்னுடைய வாகனத்திற்கு தமிழக அரசு உரிய அங்கீகாரம் அளித்து நிதி உதவி கொடுக்க வேண்டும் என வைர மூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் வைர மூர்த்தியின் செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |