Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. நடிகர் விக்ரமை பாராட்டிய டுவிட்டர் நிறுவனம்….. எதற்காக தெரியுமா….? வைரலாகும் பதிவு….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் கூட்டணியில் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பல வருடங்களாக சமூக வலைதளத்தில் இணையாமல் இருந்த விக்ரம் பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படங்கள் ரிலீசுக்கு இடையில் டுவிட்டரில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதனையடுத்து டுவிட்டரில் பல்வேறு விதமான பதிவுகளை நடிகர் விக்ரம் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக நடிகர் விக்ரமை டுவிட்டர் நிறுவனம் தற்போது பாராட்டியுள்ளது. இது குறித்து டுவிட்டர் நிறுவனம் வெளியிட்ட பதிவில், நேர்மறையான மற்றும் உத்வேகம் அளிக்கும் பதிவினால் நீங்கள் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்துவதற்கு எங்களுடைய பாராட்டுக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பதிவை விக்ரம் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Categories

Tech |