சூர்யா -ஜோதிகாவின் அழகிய செல்பி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் திருமணத்திற்கு முன்னர் பேரழகன், ஜில்லுனு ஒரு காதல், பூவெல்லாம் கேட்டுப்பார் மற்றும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2007ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதன் பிறகு இவர்கள் இணைந்து எந்த ஒரு படத்திலும் நடிக்காதது ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கிறது.
சமீபகாலமாக இவர்களின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், தற்போது சில வருடங்களுக்கு முன்னர் இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய செல்பி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.