சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டில் ஆளில்லாத நேரம் பார்த்து மர்ம நபர்கள் சிலர் 13 பவுன் தங்க நகைகள் மற்றும் 1,40,000 ரொக்கம் ஆகியவற்றை திருடி விட்டு சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகுமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சசிகுமார் வீட்டில் இருந்து திருடிய 13 சவரன் தங்க நகை மற்றும் 1,40,000 ரொக்கம் ஆகியவற்றை நேற்று நள்ளிரவில் ஒரு மஞ்சள் பையில் கட்டி மர்ம நபர்கள் சிலர் அவருடைய வீட்டு வாசலில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இதை பார்த்ததும் சசிகுமாருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்துள்ளது. இந்த தகவலை போலீசாரிடம் சசிகுமார் கூறியுள்ளார். மேலும் பணம் மற்றும் நகையை திருடிய நபர்களை மீண்டும் அதை வீட்டில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.