Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. இது அல்லவா வளர்ச்சி!!…. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு புது வீடு வாங்கிய ஜிபி முத்து…. குவியும் வாழ்த்து….!!!!!

டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜிபி முத்து தடைக்குப் பிறகு youtube பக்கம் ஒதுங்கினார். இவர் யூடியூபில் வெளியிடும் வீடியோக்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவருக்கு டிக் டாக் மூலம் கிடைத்த புகழின் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். இவர் சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜிபி முத்து தன்னுடைய ஓட்டு வீட்டில் இருந்து புதிய வீட்டிற்கு குடி பெயர்ந்துள்ளார். இந்த வீட்டின் பால் காய்ச்சி நிகழ்வை வீடியோவாக எடுத்து ஜிபி முத்து தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் ஜி.பி முத்துவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |