இணையதளத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் நாள்தோறும் வெளியாகி பொதுமக்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்கிறது. அந்த வகையில் பாம்பு ஒன்று செருப்பை திருடும் வீடியோவானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பொதுவாக கோவில்கள் அல்லது வெளியிடங்களுக்கு செல்லும்போது யாராவது செருப்பை திருடிவிட்டு சென்று விடுவார்கள். இது போன்ற சம்பவங்கள் பலரது வாழ்க்கையிலும் நடந்திருக்கலாம்.
ஆனால் தற்போது பாம்பு ஒன்று புதிதாக செருப்பை வாயில் கவ்விக்கொண்டு செல்லும் வீடியோவானது வலைதளத்தில் வைரலாவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை IFS சதிகாரியான பர்வாஸ் கவான் என்பவர் தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் பாம்பை பார்த்த பலரும் அலறி ஓடுவது போன்றும் பதிவாகியுள்ளது.
I wonder what this snake will do with that chappal. He got no legs. Unknown location. pic.twitter.com/9oMzgzvUZd
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) November 24, 2022