தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் திரிஷாவுக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில், இவர் தெலுங்கில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்த திரைப்படம் ”வர்ஷம்”. 2004 இல் வெளியான இந்த திரைப்படம் 18 ஆண்டுகள் கழித்து ஆந்திரா, தெலுங்கானாவில் மீண்டும் மறு ரிலீஸ் செய்துள்ளனர். இதனை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/trishakrishnan/