தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அண்மையில் வாடகைத்தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு நடிகை நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது வாடகைத்தாய் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து விட்டார். அதோடு தன் வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான விஷயங்களையும் நடிகை நயன்தாரா பகிர்ந்து கொண்டார். அப்போது விக்னேஷ் சிவன் தனக்கு கொடுத்த இரண்டு பரிசுகளையும் நயன்தாரா காண்பித்தார். அதாவது விக்னேஷ் சிவன் தன்னுடைய காதல் மனைவிக்கு வி எழுத்து உள்ள ஒரு பிரேஸ்லெட்டையும், ஒரு அழகிய கைக்கடிகாரத்தையும் பரிசாக வழங்கியுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.