தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் வில்லன், குணசத்திர வேடம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பான முறையில் நடித்து அசத்துவார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டிஎஸ்பி திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதன் பிறகு நடிகர் விஜய் சேதுபதி தற்போது ஜவான், விடுதலை, காந்தி டாக்ஸ் உள்ளிட்ட ல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஸ்மார்ட்டான லுக்கில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் விஜய் சேதுபதி உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிவிட்டாரே என்று கூறி வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படமானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram