தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் விஷால் ஹீரோ என்பதை தாண்டி மற்றும் சமூக நல சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் 11 ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்து, 51 வகை சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார். 11 ஏழை ஜோடிகளுக்கு திருமணமானது திருவள்ளுவர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கத்தின் தலைவர் கண்ணன் மற்றும் செயலாளர் ஹரிகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன் காரணமாக மக்கள் நல பணிகளை சிறப்பாக செய்த காரணத்திற்காக கண்ணனுக்கு விஷால் தங்க சங்கிலி பரிசாக கொடுத்தார்.
இதேபோன்று பொறுப்பாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கும் பரிசு பொருட்களை அள்ளிக் கொடுத்து விஷால் உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போதும் மிகவும் சிறப்பாக மக்கள் நல சேவையில் ஈடுபட்டவர்களுக்கு விஷால் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கியுள்ளார். அதன்படி சென்னையில் உள்ள மக்கள் நல இயக்க தலைவர் ராபர்ட், மக்கள் நல இளைஞர் அணி தலைவர் கருவாயன், வடசென்னை தலைவர் சீனு, மாவட்ட செயலாளர் யுவராஜ், ராயபுரம் பகுதி தலைவர் அன்பு ஆகியோருக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் நல இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு விஷால் அடிக்கடி பரிசு பொருட்களை வழங்குவதால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக களப்பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.