உலக அளவில் 200 கோடி பயனர்களைக் கொண்ட வாட்ஸ் அப்பில் மெட்டா நிறுவனம் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் புதிய அவதார் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அவதார் ஸ்டிக்கர்ஸ் மூலம் நம்முடைய உணர்வுகளை மிகத் துல்லியமான முறையில் சாட்டில் தெரிவிக்க முடியும். இந்நிலையில் அவதார் ஸ்டிக்கர்களை எப்படி உருவாக்கி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில் வாட்ஸ் அப்பில் புதிய ஷாட் பாக்ஸை திறந்து வைத்துவிட்டு GIF-க்கு அடுத்து இருக்கும் எமோஜியை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு Avatar creator two box என்பதை கிளிக் செய்தால் create your avatar என்ற ஆப்ஷன் திறக்கும்.
இதில் உங்களுக்கு பிடித்த மாதிரியான ஸ்டிக்கர்களை உருவாக்கி டன் என்று கொடுத்தால் அவதார் ஸ்டிக்கர் உருவாகிவிடும். இந்த ஸ்டிக்கரை நீங்கள் வாட்ஸ் அப்பில் சேமித்தவுடன் புதிய ஸ்டிக்கர் பேக் தானாகவே உருவாகி விடும். இந்த ஸ்டிக்கர் பாக்ஸில் இருக்கும் ஸ்டிக்கர்களை நீங்கள் சாட் செய்யும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இதனையடுத்து அவதார் ஸ்டிக்கரை டிபியாக வைக்க வேண்டும் என்றால், செட்டிங்ஸ் ஆப்ஷனுக்குள் சென்று ப்ரொபைல் பிக்சரை கிளிக் செய்ய வேண்டும். அதில் இருக்கும் பென்சில் படத்தை தேர்வு செய்தால் டிஜிட்டல் அவதார் படத்தை டிபியாக மாற்றிக் கொள்ளலாம். மேலும் நீங்கள் விருப்பப்பட்டபடி புதிய ஸ்டிக்கர்களை உருவாக்கிக் கொள்வதோடு அதை சேமித்து வைத்து சாட் பாக்ஸில் தேவைப்படும் நேரத்தில் அனுப்பியும் கொள்ளலாம்.