தூத்துக்குடி சாத்தான்குளம் சம்பவம் குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு நேரத்தை தாண்டி சிறிது நேரம் கூடுதலாக கடை திறந்து வைத்திருந்தன் காரணமாக வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறை அதிகாரிகளால் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் தங்களது கண்டனங்களை ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில்,
அடிப்பவனுக்கு தேவை ஆயுதம். வலிப்பவருக்கு தேவை காரணம்.இனத்துக்காக, மதத்துக்காக,நிறத்துக்காகன்னு போய், இப்போ எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் மகனும்.கடந்து செல்வது எளிதல்ல, நீதி கிடைக்காமல் மறந்து செல்வது மனிதமல்ல. மனிதம் எங்கே? #JusticeforJayarajAndFenix இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது வைரலாக பரவி வருகிறது.
அடிப்பவனுக்கு தேவை ஆயுதம். வலிப்பவருக்கு தேவை காரணம்.இனத்துக்காக, மதத்துக்காக,நிறத்துக்காகன்னு போய், இப்போ எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் மகனும்.கடந்து செல்வது எளிதல்ல, நீதி கிடைக்காமல் மறந்து செல்வது மனிதமல்ல. மனிதம் எங்கே#JusticeforJayarajAndFenix
— Harbhajan Turbanator (@harbhajan_singh) June 27, 2020