மாரி, மாரி 2 ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் பாலாஜி மோகன் ஓபன் விண்டோ புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை கடந்த ஜுலையில் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் முதல் படமாக யோகிபாபு நடிப்பில் மண்டேலா என்ற திரைப்படம் உருவாகிவருகிறது. முழு நீள காமெடி படமாக உருவாகி வரும் மண்டேலாவில் சங்கிலி முருகன், ஜிஎம்.சுந்தர், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கும் இந்த படத்தை ஓபன் விண்டோ புரொடக்ஷன் நிறுவனத்துடன் ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் விஷ்பெரி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களும் தயாரிக்கின்றன.
இந்தப் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை படப்பிடிப்பின்போதே படக்குழு வெளியிட்டிருந்தது. இதன் இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்து 2020ல் திரைக்கு வரும் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யோகிபாபு கைவசம் தற்போது ஹீரோ, பன்னிக்குட்டி, தர்பார், வெள்ளை யானை, கடைசி விவசாயி உள்ளிட்ட படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Wrapped up shoot for my 1st Feature film production #Mandela 🙂
Directed by @madonneashwin
Starring @iYogiBabu
An @OpenWindowOffl Production in association with @StudiosYNot @RelianceEnt @Wishberry_in@sash041075@chakdyn#YNOT17 @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 pic.twitter.com/cxlUGApb86— Balaji Mohan (@directormbalaji) November 19, 2019