Categories
அரசியல் மாநில செய்திகள்

எழுதி வச்சுக்கோங்க…! தமிழகத்தில் ஒன்னும் இருக்காது… BJP, RSSயை சொல்லி எச்சரித்த மார்க்சிஸ்ட் ..!!

மனிதநேய மக்கள் கட்சி நடத்திய ஆர்பாட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இன்றைக்கு நம்முடைய நாட்டில் இருக்கின்ற உச்சநீதிமன்றத்திலே பல வழக்குகள் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வழக்கில் ஒரு வழக்கு என்ன வழக்கு என்றால் ? இந்தியாவிலேயே இருக்கின்ற எல்லா மசூதிகளுக்கும் சென்று நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

இந்தியாவில் இருக்கின்ற எல்லா தேவாலயங்களுக்கும் சென்று நாங்கள் ஆய்வு நடத்த வேண்டும், அந்த ஆய்வு நடத்துவதற்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும். அப்படி ஆய்வு செய்வதற்கு தடை செய்கின்ற ஒரு சட்டம் இந்த நாட்டில் இருக்கிறது. புகழ் பெற்ற பாபர் மசூதியை இடுத்து தரைமட்டம் ஆக்கினார்களே…  அந்த கயவாளிகள்.. அப்போது இருந்த நரசிம்மராவ் ஒரு சட்டம் போட்டார், என்னவென்று சொன்னால் ? இதற்கு மேல் இந்தியாவிலே எந்த வழிபாட்டு தலங்களிலும்,  இந்த நீதிமன்றம் தலையிடக்கூடாது.

நீதிமன்றத்திலே வழக்கு போட கூட கூடாது. 47 ஆம் ஆண்டு எந்தெந்த வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்ததோ அப்படியே இருக்க வேண்டும் என்று வழிபாட்டுத்தளங்கள் பாதுகாப்பு சட்டம் என்கின்ற ஒரு சட்டத்தை கொண்டு வந்தார்கள். இன்றைக்கு ஆர்எஸ்எஸ், பிஜேபிக்காரர்கள் வழக்கு போட்டிருந்தார்கள். அந்த சட்டம் இருக்கின்ற காரணத்தினால் எங்களால் மசூதிக்குள் போய் ஆய்வு நடத்த முடியவில்லை, தேவாலயத்தில் சென்ற ஆய்வு நடத்த முடியவில்லை.

எனவே கணம் நீதிபதி அவர்களை அந்த சட்டத்தை ரத்து செய்யுங்கள் என்று இன்றைக்கு வழக்கு போட்டு இருக்கிறார்கள்.பாபர் மசூதியில் சொன்ன மாதிரி ஒரு தீர்ப்பு இதில் சொன்னால் என்று வைத்துக் கொள்ளுங்கள்…  இடித்தது தப்புதான், ஆனால் இடித்தவர்களிடமே கொடுத்து விடுவோம், இது தீர்ப்பா? நாட்டில் கட்டப்பஞ்சாயத்து நடத்துபவர்கள் கூட நன்றாக தீர்ப்பு சொல்வார்கள்,  நாளைக்கு இதே போல ஒரு தீர்ப்பு அந்த வழக்கில் வரும் என்று சொன்னால், அருமை நண்பர்களே எழுதி வைத்துக் கொள்ளுங்கள்…

தமிழகத்தில் இருக்கின்ற ஒரு தேவாலயம் கூட பாக்கி இருக்காது, தமிழகத்தில் இருக்கின்ற ஒரு மசூதி கூட பாக்கி இருக்காது. இந்தியா முழுவதும் இருக்கின்ற வழிபாட்டுத் தலங்கள் வன்முறைக்கூட்டங்களாக மாற்றப்படும். அமைதியாக ஆண்டவனை வழிபடுகின்ற, அமைதியாக தேவனை வழிபடுகின்ற அந்த மத ஆலயங்கள் எல்லாம் வன்முறைகளை உருவாக்கி, இடித்து தள்ளுவார்கள் என எச்சரித்தார்.

Categories

Tech |