Categories
அரசியல்

“இது என்னடா..? புது குழப்பம்”…. குளறுபடி நிறைந்த வாக்காளர் பட்டியல்… அதிர்ச்சியடைந்த வேட்பாளர்கள்…!!!

கறம்பக்குடி பேரூராட்சியில் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களில் பல தவறுகள் இருப்பதால் வேட்பாளர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

கறம்பக்குடி பேரூராட்சியில் மொத்தம் 15-வார்டுகளும், 13,183 வாக்காளர்களும் இருக்கும் நிலையில், இதற்கு முன்பு இருந்த வார்டுகளுடைய எண்கள் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது மட்டுமின்றி வாக்காளர்களுக்கான வார்டுகளிலும், இதற்கு முன்பு இருந்த பகுதியில் இருந்து மற்றொரு வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

எனவே, வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளரின் பெயர், புகைப்படம் மற்றும் தந்தை பெயர் தவறுதலாக இருப்பதால் வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

கறம்பக்குடி பேரூராட்சியில் 6வது வார்டில் பெண் வேட்பாளரின் பெயர் கறம்பகுடி என்று இருக்கிறது. இதே போன்று இரண்டாவது வார்டில் வாக்காளர் ஒருவரின் தந்தை பெயரில் புதுக்கோட்டை என்று இருக்கிறது. இதுமட்டுமின்றி பெண் வேட்பாளர் பெயரில் ஆண் புகைப்படம் இருக்கிறது. இவ்வாறு வாக்காளர் பட்டியலில் பல பிரச்சனைகள் இருக்கிறது.

Categories

Tech |