Categories
தேசிய செய்திகள்

ராங்க் ரூட்டுலயா போறீங்க…. அமைச்சரையே மடக்கி அபராதம் போட்ட…. போலீசாருக்கு குவியும் பாராட்டு…!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி ராமாராவ் காந்தி ஜெயந்தி அன்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த செல்லும்போது அமைச்சருடைய கார் தவறான பாதையில் சென்றுள்ளது. அதைக்கண்ட போக்குவரத்து எஸ் ஐலய்யா தவறான பாதையில் வந்த அமைச்சரின் காரை நிறுத்தி அவருக்கு அபராதம் விதித்துள்ளார். காரை அமைச்சரே ஒட்டி வந்த நிலையில் காரை தடுத்த போக்குவரத்து எஸ்ஐ ஐலய்யாவை தன்னுடைய அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டியும், பொன்னாடை போர்த்தியும், அவரை கௌரவித்துள்ளார்.

மேலும் இது குறித்து பேசிய அமைச்சர்,போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதில் தாம் எப்போதும் முன்னணியில் இருப்பதாகவும், எதிர்பாராத விதமாக காந்தி ஜெயந்தி அன்று தவறான பாதையில் வர நேர்ந்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் போக்குவரத்து விதிமுறைகளுக்கு பொதுமக்களும், மக்கள் பிரதிநிதிகளும் சமமானவர்கள் தான் என்று கடமை தவறாமல் பணியாற்றிய ஐலய்யா போன்ற அதிகாரிகளுக்கு அரசு துணையாக இருக்கும் என்று கே.டி ராமாராவ் உறுதியளித்துள்ளார்.

Categories

Tech |