Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தவறான பட்டா பதிவு…. தொடர் உண்ணாவிரதம்…. முஸ்லிம் ஜமாத் போராட்டம் …!!

பட்டாவில் தவறாக பதிவு செய்த பெயரை நீக்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆசாத்புரம் முஸ்லிம் ஜமாத் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றது.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், களக்காடு மேலப்பத்தை, பத்தை  பகுதி-1 கிராமம் புல எண் 413/1ல் உள்ள ஆசாத்புரம் முஸ்லிம் ஜமாத்திற்கு சொந்தமான இடத்தை வருவாய்த்துறை UDR பட்டாவில் சாமிக்கண்ணு என்பவர் பெயரில் தவறாக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வருவாய்த்துறையினர் UDR பட்டாவில் தவறாக பதிவு செய்த பெயரை நீக்க 2018ல்  கொடுத்த மனுவை விசாரித்து முடிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆசாத்புரம் முஸ்லிம் ஜமாத் சார்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி நடந்த போராட்டத்தின்போது நாங்குநேரி வட்டாட்சியர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திருமதி ஷில்பா பிரகாஷ் சதீஸ் அவர்கள் ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததை தொடர்ந்து தற்போது மேலபத்தை ஆசாத்புரம் முஸ்லிம் ஜமாத் சார்பில் பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து 27-9-2020 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

Categories

Tech |