Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தி.மு.க தலைவர்கள் குறித்து… சமூக வலைதளங்களில் அவதூறு… சிறை சென்ற வாலிபர்…!!

சமூக வலைதளங்களில் தி.மு.க தலைவர்கள் குறித்து அவதூறு பரப்பியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள கே.கே. நகர் பகுதியில் கிஷோர் சாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கிஷோர் தி.மு.க தலைவரும், முதலமைச்சரருமான திரு. மு.க ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் குறித்து அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதனை அடுத்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளரான ரவிச்சந்திரன் என்பவர் கிஷோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கிஷோரை கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அதன்பின் நீதிபதி கிஷோரை வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்..

Categories

Tech |