Categories
கிரிக்கெட் விளையாட்டு

WTC final : கண்டிஷன் சீம்,ஸ்விங்கிற்கு சாதகமாக இருந்தா …. விராட் கோலி தடுமாறுவாரு – க்ளென் டர்னர்…!!!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டனில்  நடைபெறுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி இங்கிலாந்தில் மிகப்பெரிய அளவில் சாதித்தது இல்லை. அதோடு இங்கிலாந்து  சீதோஷ்ண நிலை நியூசிலாந்து அணிக்கு சாதகமாக உள்ளது. இதனால் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற , அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி ,ரோகித் சர்மா ,புஜாரா மற்றும் ரகானே போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை காட்டினால் , இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

அத்துடன் சவுத்தாம்ப்டனின்  சீதோஷ்ண நிலை ஸ்விங் மற்றும் சீம் பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்தால், இந்திய அணி கேப்டன் விராட்கோலி தடுமாற வேண்டிய நிலை ஏற்படும் என நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான க்ளென் டர்னர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,  சவுத்தாம்ப்டனின் சீதோஷ்ண நிலை ஸ்விங் மற்றும் சீம்  பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்தால், விராட் கோலி நியூசிலாந்தில்  திணறியது போல, இங்கும் திணற வேண்டிய  நிலை ஏற்படலாம். உண்மையை  சொன்னால் , சொந்த மண்ணில் விளையாடும்போது, பேட்ஸ்மேன்கள் ஆதிக்கத்தை செலுத்துவார்கள். கடந்த சில வருடங்களாகவே  இந்தியாவின் பிட்சுகள்,வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக தயாரிக்கப்படுகிறது . ஆனால் நியூசிலாந்துடன், இந்திய சூழ்நிலையை ஒப்பிட முடியாது. இங்கிலாந்தில் நிலவும் சீதோஷ்ண நிலை , நியூசிலாந்துக்கு ஒத்துப்போவதாக இருக்கும் என்று அவர் கூறினார்.

Categories

Tech |