மழையின் காரணமாக முதல் நாள் ஆட்டத்தின் முதல் செசன் ஆட்டம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஆனால் போட்டி நடைபெற உள்ள சவுத்தம்டனில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகாலை முதலே சவுதாம்டனில் லேசான மழை பெய்து வருகிறது .
இதனால் டாஸ் போடும் நிகழ்வு தற்காலிகமாக நிறுத்த வைக்கப்பட்டுள்ள நிலையில் போட்டியின் முதல் செசன் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது .இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.