உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. ஆனால் நேற்று முன் தினம் மழையால் பாதிக்கப்பட்டதால் முதல் நாள் ஆட்டம் டாஸ் சுண்டப்படாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 2 வது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தால் இந்திய அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. நேற்று நடந்த ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 64 .4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்திருந்து .
இதையடுத்து இன்று காலை 3 ம் நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் களமிறங்கிய கேப்டன் விராட்கோலி 44 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளிக்க , அடுத்து வந்த ரிஷப் பண்ட் 4 ரன்னில் வெளியேறினார். இதனால் மிடில் ஆர்டரில் களம் இறங்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறியதால் இந்திய அணி 200 ரன்களை எடுக்கவே கடும் பாடுபட்டது. இறுதியில் 92.1 ஓவர்களில் இந்திய அணி 217 ரன்கள் ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக ரஹானே 46 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து சார்பில் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.