நிதி திரட்ட தன்னுடன் அமர்ந்து இரவு உணவருந்தும் வாய்ப்பை வழங்க இருப்பதாக அண்டர்டேக்கர் தெரிவித்துள்ளார்.,
கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வேலை இன்றி உண்ண உணவின்றி மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பசியால் வாடும் மக்களுக்கு உதவி புரிய அண்டர்டேக்கர் முன்வந்துள்ளார். ஏழை மக்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்ட அண்டர்டேக்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆல்-இன்-சேலஞ்ச் என்ற சவால் மூலம் தன்னுடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிடும் வாய்ப்பைக் கொடுப்பதன் வாயிலாக நிதி திரட்ட உள்ளதாகவும், உணவு சாப்பிடும் பொழுது முக்கிய போட்டி ஒன்றில் பயன்படுத்திய உடை ஒன்றை அளிக்க இருப்பதாகவும், அது தான் உண்மையான டீல் அந்த உடை மிகவும் தனித்தன்மை வாய்ந்தது எனக்காக தயாரிக்கப்பட்டது எனவும் கூறியிருக்கிறார் அண்டர்டேக்கர். இந்த காணொளி இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
https://www.instagram.com/tv/B–s4CFjrmY/?utm_source=ig_web_button_share_sheet