Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“அப்போதான் உன்னை விடுவோம்” செய்வதறியாது பதறிய உரிமையாளர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

50 லட்ச ரூபாய் கேட்டு 2 பேர் ஜெராக்ஸ் கடைக்காரரை காரில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராம்குமார் என்ற வாலிபர் இவரிடம் 30 ஆயிரம் ரூபாயை கடன் வாங்கியுள்ளார். இதனை அடுத்து கடன் தொகையை திருப்பித் தருவதாக கூறி காளிமுத்துவை ராம்குமாரும், அவரது நண்பர்களும் காரில் அழைத்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து காரில் சென்ற காளிமுத்துவை ராம்குமார் தனது நண்பர்களுடன் இணைந்து கத்தியால் தாக்கியதோடு, 50 லட்ச ரூபாய் தந்தால் தான் உன்னை விடுவிப்போம் என்று கூறியுள்ளனர்.

அதன்பின் அவர்கள் காளிமுத்துவிடம் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு அவரை காரிலிருந்து இறக்கி விட்டுள்ளனர். இதுகுறித்து காளிமுத்து காட்டுமன்னார்கோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராம்குமார் மற்றும் அவரது நண்பரான அஜித்குமார் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 1 லட்ச ரூபாயை பறிமுதல் செய்ததோடு, மற்றொரு குற்றவாளியான கார் டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |