Categories
டெக்னாலஜி பல்சுவை

செப்டம்பரில் அசத்த வரும் புதிய ஸ்மார்ட்போன் … சியோமி , விவோ க்கு ஆப்பு ..!!

லெனோவோ நிறுவனம் தனது புதிய படைப்பான நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது .

லெனோவோ நிறுவனம்  நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனை செப்டம்பர் 5 ஆம் தேதி  முதல் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது . இதற்குமுன் , செப்டம்பர் 5 ஆம் தேதி கில்லர் நோட் ஸ்மார்ட்போனை  அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தது . இந்நிலையில் , தற்போது நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனை  அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது .

Related image

இந்த , புதிய ஸ்மா்ர்ட்போன்கள்  லெனோவோ கே10 நோட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது . மேலும் , இதற்கு முந்தைய  லெனோவோ கே9 நோட் ஸ்மார்ட்போனில் 5.9 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080×1920 பிக்சல் ரெசல்யூஷன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 4 ஜிபி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டது .

Related image

 

இதுமட்டுமின்றி , கடந்த ஆண்டு அக்டோபரில் லெனோவோ நிறுவனம்  பட்ஜெட் விலையில் இரண்டு  ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த லெனோவோ ஏ5 மற்றும் லெனோவோ கே9  ஸ்மார்ட்போன்கள்  முறையே ரூ. 5,999 மற்றும் ரூ. 8,999 விலையில் அறிமுகம் செய்யபட்டிருந்தது  . இவை சியோமியின் ரெட்மி 6 சீரிஸ் மாடல்களுக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டிருந்தது .

 

Related image

 

மேலும் , லெனோவோ கே9 ஸ்மார்ட்போனில் சிறப்பம்சங்களை பொருத்தவரை 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720×1440 பிக்சல் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே, மீடியாடெக் MTK6762 ஆக்டா-கோர் பிராசஸர், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டது. இதுமட்டுமின்றி , லெனோவோ கே9 ஸ்மார்ட்போனில் 13 எம்.பி. + 5 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார், ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டது. ஆகையால் இந்த புதிய லேனெவோ ஸ்மார்ட்போன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது .

Categories

Tech |