பிளாக் ஷார்க் 2 ப்ரோ, SD 855+ மொபைல் பிராசஸர் மூலம் இயக்கப்படும் முதல் சியோமி ஸ்மார்ட்போன் ஜூலை 30ல் அறிமுகமாகிறது .
பிளாக் ஷார்க் நிறுவனம்,குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரால் இயங்கும் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது . அதன் தொடர்ச்சியாக இந்நிறுவனம் பிளாக் ஷார்க் 2 மாடலின் மற்றொரு வகை ஜூலை 30 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிளாக் ஷார்க் 2 ப்ரோ என்பது சியோமியின் பிளாக் ஷார்க் வரிசையில் மூன்றாவது ஸ்மார்ட்போன் ஆகும், இது இன்னும் சக்திவாய்ந்ததாக இருக்கும். வெய்போவின் பதிவின் படி, பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஜூலை 30 ஆம் தேதி அறிமுகமாகும் என்றும்,வெளியீட்டு தேதி மற்றும் சிப்செட் தவிர, சியோமி வேறு எந்த விவரங்களையும் குறிப்பிடவில்லை. 5ஜி கனெக்டிவிட்டியை கொண்ட இந்த பிராசஸர் முந்தைய பிராசஸரை விட சிறப்பான கேமிங் அனுபவத்தை கொடுக்கும்.
பிளாக் ஷார்க் 2 2.84GHz ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 6 ஜிபி ரேம் உடன் வருகிறது. பிளாக் ஷார்க் 2 ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குகிறது மற்றும் 4,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.இது சியோமி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என நம்பப்படுகிறது.